
கோவா சட்டப்பேரவைத் தேர்தல்: 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக
கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக புதன்கிழமை அறிவித்தது.
கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
அதன் ஒருபகுதியாக கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதையும் படிக்க | முற்றிலும் புதிய தோற்றத்தில் பிரபல நடிகர்: வெளியான விடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்
இந்நிலையில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக புதன்கிழமை அறிவித்தது.
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க | அழுகிய சடலத்தின் கையில் எழுதப்பட்ட எண்: குற்றவாளியை காட்டிக்கொடுத்தது
ஏற்கெனவே கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், சங்கேலிம் தொகுதியிலும் துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர் மார்கோ தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜேஷ் துளசிதாஸ் பட்னேகர், ஜோஷப் ராபர்ட், அண்டோனியோ பெர்னாண்டட்ஸ், ஜனிதா பாண்டுரங் மட்கைகர், நாராயண ஜி.நாயக், அந்தோணி பர்போசா உள்ளிட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...