தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அமலாக்கத்துறையில் 2-வது முறையாக சோனியா காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகியுள்ளார்.

கோப்புப்படம்

Published On :

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகியுள்ளார்.

அவரிடம் கடந்த 21-ஆம் தேதி இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக விசாரணை நடைபெற்று வருகின்றது. சோனியா காந்தி அளிக்கும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

சோனியா காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தியும் சென்றுள்ளனர்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரது இல்லம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகப் பகுதிகளில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), அதிவிரைவு படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த முறை சோனியாவிடம் நடத்திய விசாரணையின்போது, 28 கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.