மோடி ஒரு சர்வாதிகாரி: விடியோ மூலம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 
மோடி ஒரு சர்வாதிகாரி: விடியோ மூலம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் காவல் துறையின் மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் இதனைத் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக இன்றும் (ஜூன் 15) அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காலை ராகுல் காந்தி விசாரணைக்காக ஆஜரானார். இதனிடையே அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வெளியேயும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். 

இந்நிலையில், தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்களை தில்லி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். இது தொடர்பான விடியோவை காங்கிரஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, மோடியை சர்வாதிகாரி என குறிப்பிட்டுள்ளது.

மேலும், ரெளடியிசம் செய்ய வேண்டும் என்றால், பிரதமர் மோடி ஜனநாயக நாற்காலியிலிருந்து இறங்கி மக்கள் முன்பு வர வேண்டும் எனவும் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு காவல் துறையினர் என்ற பெயரில் குண்டர்களை அனுப்பி வைத்துள்ளீர்கள். மிகப்பெரிய சாம்ராஜியங்களை இந்த அலுவலகம் கண்டுள்ளது. உங்கள் ஈகோவை நிச்சயம் உடைத்தெறிவோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com