மாநிலக் கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டும் கட்சிகளில் திமுக முதலிடம்!

தமிழக ஆளுங்கட்சியான திமுக 2020-21 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.149.95 கோடி வருமான ஈட்டி, மாநிலக் கட்சிகளில் அதிகமான வருவாய் ஈட்டியக் கட்சிகளின் பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது.
மாநிலக் கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டும் கட்சிகளில் திமுக முதலிடம்!


புதுதில்லி: தமிழக ஆளுங்கட்சியான திமுக 2020-21 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.149.95 கோடி வருமான ஈட்டி, மாநிலக் கட்சிகளில் அதிகமான வருவாய் ஈட்டியக் கட்சிகளின் பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது. அத்துடன் வருவாயில் 50 சதவிகிதத்துக்கும் மேல் செலவு செய்ததிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அங்தீதரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள், 2020-21 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வருவாய் மற்றும் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையம் முன்பு சமர்ப்பித்தன. இதில், 31 மாநில கட்சிகளின் வருவாய் மற்றும் செலவுகள் குறித்த அறிக்கையை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆண்டு வருமானம் மற்றும் செலவு குறித்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு. 

இந்தியாவில் மொத்தம் 54 மாநிலக் கட்சிகள் இருந்தாலும் 23 கட்சிகளின் அறிக்கை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெறவில்லை. எனவே மீதமுள்ள 31 கட்சிகள் சமர்பித்த தரவுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற முக்கிய கட்சிகளின் வருவாய் மற்றும் செலவுகள் குறித்த தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை.

வருமானத்தில் திமுக முதலிடம்:  31 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடி. இதில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான 2019-20 ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.64.90 கோடியாகவும், இது, 20202-21 ஆம் ஆண்டில் 131 சதவிகிதம் அதிகரித்து, ரூ.149.95 கோடியாக அதிகரித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவிகிதம் ஆகும். இதையடுத்து மாநிலக் கட்சிகளின் வருவாயில் திமுக முதலிடத்தில் உள்ளது. 

இரண்டாவது இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. இதன் வருவாய் ரூ.107.99 கோடியாக உள்ளது. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி ரூ.73.34 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

செலவில் திமுக முதலிடம்:  அதே நேரத்தில் கட்சிகளின் மொத்த செலவு ரூ.414.02 கோடி. கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானத்தை விட அதிகம் செலவிடப்பட்டுள்ளதாக திமுக கணக்கு காட்டியுள்ளது. இதில், இந்த நிதியாண்டில் ரூ.218 கோடி செலவுக் கணக்கு காட்டியுள்ளது. அதாவது 52.767 சதவிகிதம் வருவாய் செலவு செய்துள்ளது. 

அதிமுக: இதற்கு அடுத்தபடியாக அதிக செலவு செய்த மாநில கட்சிகளின் பட்டியலில் அதிமுக ரூ.42.36 கோடி செலவு செய்துள்ளது.

2019-20 இல் ஆட்சியில் இருந்த அதிமுக ரூ.89 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தொகை, அடுத்த 2020.21 நிதியாண்டில் ரூ.34 கோடியாக குறைந்துள்ளது. 

அதே நேரத்தில் மதிமுக மற்றும் பாமக கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்துள்ளன. 

2019 இல் ரூ.150 கோடியாக இருந்த மதிமுகவின் வருமானம் 2020 இல் ரூ.2.86 கோடியாகவும், பாமகவின் வருமான ரூ.55.60 லட்சத்தில் இருந்து ரூ.1.16 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 

தேர்தல் நிதிப் பத்திரங்கள்: வருமானம் மற்றும் செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்த மாநிலக் கட்சிகள், வருமானங்கள் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளவையாகக் கூறின. குறிப்பாக, ஆய்வில் 

31 கட்சிகளும் தேர்தல் நிதி மூலம் பெற்றதாகக் கூறியுள்ளன. 2019-2021 காலகட்டத்தில், 7 தேசியக் கட்சிகள் தங்களின் வருவாயில் 62 சதவிகிதம் தேர்தல் நிதியில் இருந்து பெறப்பட்டவை என்று கூறியுள்ளன. 

ஒரு கட்சிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோருக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இது ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது கூட்டமைப்பால் வாங்கப்படலாம். பாரத ஸ்டேட் வங்கி இந்தத் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறது.

வெளிப்படைத்தன்மை வேண்டும்: இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசியல் கட்சிகள், தங்கள் நிதி நிலை குறித்த தகவல்களை தாக்கல் செய்வதை மேம்படுத்த வேண்டும். கட்சிகள் நிதிப் பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக நிதி ஆதாரங்கள் மற்றும் செலவுகள் பற்றிய தகவல்களைத் தாக்கல் செய்வதில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கட்சிகள் சரியான முறையில் வருவாய் மற்றும் செலவு கணக்குகளை தாக்கல் செய்தால் தான் அரசியல் கட்சிகளின் உண்மை நிலை பொதுமக்களுக்கு தெரியவரும்." என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com