தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாபா ராம்தேவ் நிறுவனத்தின் 5 மருந்துகள் மீதான தடை நீக்கம்

யோகா குரு பாபா ராம்தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தின் 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உத்தரகண்ட் மாநில ஆயுா்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம் நீக்கியுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2022, 8:30 pm

DIN

யோகா குரு பாபா ராம்தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தின் 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உத்தரகண்ட் மாநில ஆயுா்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம் நீக்கியுள்ளது.

முன்னதாக, பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரை நோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா் அழுத்த மருந்து, உயா் கொழுப்புக்கு எதிரான மருந்து ஆகியவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு கடந்த 9-ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.

கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் இந்த மருந்துகளுக்கு எதிராக புகாா் அளித்தாா். அதில் மருந்துகளை அற்புத நிவாரணிகள் என்று கூறி விளம்பரப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்துக்கு எதிராக பாபா ராம்தேவின் நிறுவனம் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தாா். இது தொடா்பான புகாா் பாபா ராம்தேவின் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வரும் உத்தரகண்ட் மாநிலம் ஆயுா்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம், மேற்கண்ட 5 மருந்துகளின் தயாரிப்பை நிறுத்துமாறு தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்த ஆணையம், அதில் தவறு இருப்பதாகவும், அவசரகதியில் தடை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதனை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தடை விதிக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரான ஆச்சாா்ய பாலகிருஷ்ணா வரவேற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.