காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு: பிகார் முன்னிலை

நாட்டில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் அதிகம் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. 

சனிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் பிகார் மாநிலத்தின் தர்பங்கா மற்றும் மோதிஹரி பகுதிகளில் முன்னணியில் உள்ளன. இந்த நகரங்கள் காற்று மாசு தர நிர்ணய மதிப்பில் 394 மற்றும் 377 அலகுகள் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நகரங்களைத் தொடர்ந்து சிவான் (366), பீட்டா (362), கதிஹார் (358), சாப்ரா (330), சஹர்சா (315), சமஸ்திபூர் (309) மற்றும் முசாபர்பூர் (303) ஆகிய நகரங்கள் உள்ளன. 

இந்தப் பட்டியலில் சென்னை 108 அலகுகளுடன் 39ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு நகரங்களில் கோயமுத்தூர் 148 அலகுகளுடன் 43ஆவது இடத்திலும், காஞ்சிபுரம் 82 அலகுகளுடன் 85ஆவது இடத்திலும், ஊட்டி 85 அலகுகளுடன் 123ஆவது இடத்திலும், சேலம் 84 அலகுகளுடன் 143ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com