டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியாவில் அதிக ஊழல் செய்யும் மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் அதிகம் உழல் செய்யும் மாநிலமாக கர்நாடக அரசு உள்ளதென காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள் கிழமை இன்று (அக்.2) தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :3 அக்டோபர் 2022, 12:38 pm

DIN


இந்தியாவில் அதிகம் உழல் செய்யும் மாநிலமாக கர்நாடக அரசு உள்ளதென காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திங்கள் கிழமை இன்று (அக்.2) தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

கர்நாடக அரசு விவசாயிகளிடமிருந்து 40 சதவிகிதம் கமிஷன் தொகையைப் பெறுகிறது. விவசாயிகளிடமிருந்து மட்டுமல்லாமல், சிறு - குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கமிஷனைப் பெறுகிறது. 

40 சதவிகிதன் கமிஷன் பெறுவது குறித்து ஒப்பந்ததாரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டிலேயே அதிகம் ஊழல் செய்யும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.