திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அகிலேஷ் யாதவுக்கு தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த யோகி

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அவரின் மகன் அகிலேஷ் யாதவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார்.

News image

யோகி ஆதித்யநாத் - முலாயம் சிங் யாதவ் (கோப்புப் படம்)

Updated On :10 அக்டோபர் 2022, 12:56 pm IST

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அவரின் மகன் அகிலேஷ் யாதவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவுடன் அவர் பேசியதாக உத்தரப் பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நீதியின் தூணாக இருந்தவர். மிக நீண்ட போராட்டத்தின் முடிவாக அவரின் மரணம் அமைந்துள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் திங்கள் கிழமை இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 82.

அவரின் மறைவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.