பிரதமர் மோடியின் தூதுவர்களாக மாறுங்கள்: அமித் ஷா

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்து ஆனால் குஜராத்தில் வசிக்காமல் இருப்பவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தூதுவர்களாக மாற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தூதுவர்களாக மாறுங்கள்: அமித் ஷா

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்து ஆனால் குஜராத்தில் வசிக்காமல் இருப்பவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தூதுவர்களாக மாற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்து பிற பகுதிகளில் இருப்பவர்கள் குஜராத்தில் பாஜக மீண்டும் மீண்டும் ஆட்சியமைக்க முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார். குஜராத்தைச் சேர்ந்த பிற பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்காக ’பிரவாசி குஜராத்தி பார்வ் 2022’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலமாக கலந்து கொண்ட அமித் ஷா இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: குஜராத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்று வசித்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் அவர்கள் தங்கியிருக்கும் நாட்டின் வளர்ச்சிக்காவும்  உழைக்கின்றனர். 1990-லிருந்து குஜராத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் அவர்கள் பாஜகவை வெற்றி பெற செய்கின்றனர். பாஜகவின் வெற்றிக்கு அவர்களது பங்களிப்பு மிக முக்கிய காரணம் ஆகும். உங்களது தகவல் உங்களது கிராமத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் பெறும்.

பாஜக அரசு குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. குஜராத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உலகத் தரத்திலான அடையாளத்தைக் கொடுத்துள்ளார். இந்தப் பயணத்தை நாம் அனைவரும் அப்படியே தொடரலாம். 2022 குஜராத் தேர்தலில் நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தூதுவர்களாக மாறி பாஜக தலைமையிலான ஆட்சியில் குஜராத்தின் வளர்ச்சி குறித்தும், நாட்டின் வளர்ச்சி குறித்தும் கிராமங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குஜராத் மாநிலத்தின் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்திற்கு புதிய வளர்ச்சிப் பாதையினை உருவாக்கினார். ஆபத்தான சூழலை சாதகமான சூழலாக மாற்றி குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் உழைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது நாட்டின் பல பகுதிகளும் ஜனநாயக முறைப்படியிலான அரசின் மீது நம்பிக்கையின்றி இருந்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ச்சியடையாமலே இருந்தது. பலரும் ஜனநாயக முறை என்பது எங்களுக்கு இல்லை என்பது போல இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவான மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பை உணர்ந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். நாட்டிலுள்ள ஏழை மக்களின் துன்பங்களை உணர்ந்து அவர்களின் நலனுக்காக உழைத்து வருகிறார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com