தில்லியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி வரை பட்டாசுகளுக்குத் தடை

தில்லியில் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ, வெடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: தில்லியில் காற்றுமாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ, வெடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் இந்த தடை உத்தரவானது, ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோபால் ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தயாரிப்பு, குடோன்களில் பதுக்கி வைப்பது, விற்பனை மற்றும் அனைத்து விதமான பட்டாசுகளை வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. தில்லிவாழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முறை கூடுதலாக ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்துக்கும் சேர்த்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது, தில்லி காவல்துறை, தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கவும்  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com