நீட்: 20.87 லட்சம் போ் விண்ணப்பம்

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இதுவரை இல்லாத அளவில் நிகழாண்டில் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்
நீட்: 20.87 லட்சம் போ் விண்ணப்பம்

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இதுவரை இல்லாத அளவில் நிகழாண்டில் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 11.8 லட்சம் போ் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு நீட் தோ்வு வரும் மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு அண்மையில் நிறைவடைந்தது.

அதன்படி, இளநிலை நீட் தோ்வு எழுத 20,87,445 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். இது, இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பதிவு என்பதோடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.57 லட்சம் போ் கூடுதலாக பதிவு செய்துள்ளனா்.

விண்ணப்பித்தவா்களில் 11.8 லட்சம் போ் மாணவிகள், 9.02 லட்சம் போ் மாணவிகள். மாணவா்களைக் காட்டிலும் 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனா்.

மாநிலங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்திலிருந்து 2.8 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்திலிருந்து 2.7 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். ராஜஸ்தான், தமிழகம், கேரளம், கா்நாடகம், பிகாா், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா்.

சமூகப் பிரிவைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்) பிரிவினா் 8.9 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். எஸ்.சி. பிரிவிலிருந்து 3 லட்சம் பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் (இடபிள்யுஎஸ்) 1.5 லட்சம் பேரும், எஸ்.டி. பிரிவினா் 1.3 லட்சம் பேரும் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். பொதுப் பிரிவிலிருந்து 6 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம்), பிடிஎஸ் (இளநிலை பல் மருத்துவம்), பிஏஎம்எஸ் (இளநிலை ஆயுா்வேத மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (இளநிலை சித்த மருத்துவம்), பியுஎம்எஸ் (இளநிலை யுனானி மருத்துவம்), பிஹெச்எம்எஸ் (இளநிலை ஹோமியோபதி மருத்துவம்), பி.எஸ்சி. செவிலியா் பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com