கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கேரள அரசுக்கு 35 ஏக்கர் நிலத்தை திருப்பியளித்த கோலா நிறுவனம்!

கேரளத்தில் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடாவில் உள்ள தனக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை கேரள அரசுக்குத் திருப்பித் தர கோகோ கோலா நிறுவனம் முன்வந்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:58 am

DIN

கேரளத்தில் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடாவில் உள்ள தனக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை கேரள அரசுக்குத் திருப்பித் தர கோகோ கோலா நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜுவான் பாப்லோ ரோட்ரிக்ஸ் ட்ரோவாடோ, முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக கேரளத்தில் விவசாயிகளின் தலைமையிலான விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (FPO)  விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக கோலா நிறுவனத்தின் நிலத்தை திருப்பித்தர மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. 

அதன் எதிரொலியாக கோலா நிறுவனம் 35 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு திருப்பி அளித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பண்ணை அமைக்க தொழில்நுட்ப உதவி வழங்கவும் நிறுவனம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.