நிகோபார் தீவு வளர்ச்சித் திட்டம்: 9.64 லட்சம் மரங்கள் வெட்டப்படலாம்!

அந்தமான் நிகோபார் தீவிலுள்ள நிகோபார் பகுதியில் ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
நிகோபார் தீவு (கோப்புப் படம்)
நிகோபார் தீவு (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

அந்தமானிலுள்ள நிகோபார் தீவு வளர்ச்சித் திட்டத்துக்காக 9.64 லட்சம் மரங்கள் வெட்டப்படலாம் என மத்திய சுற்றுச்சூழல் நலத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் செளபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

அந்தமான் நிகோபார் தீவிலுள்ள நிகோபார் பகுதியில் ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

சரக்குக் கப்பல்களுக்கான துறைமுகம், சர்வதேச விமான நிலையம், தொழில் நகர உருவாக்கம், 450 மெகாவோல்ட் எரிவாயு மற்றும் சோலார் மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. 

இதற்காக கிரேட்டர் நிகோபாரில் 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது நிகோபார் தீவில் 9.64 லட்சம் மரங்கள் வெட்டப்படலாம் என  சுற்றுச்சூழல் நலத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் செளபே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். 

நிகோபார் வளர்ச்சித் திட்டம் 130 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே 2022 இல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.

எனினும் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனியாகவொரு நிபுணர் குழுவை அமைத்து, அனுமதி வழங்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்தது. 

சுற்றுச்சூழல் அனுமதிக்காக மதிப்பிடப்படும் திட்டத்தின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் நலத் துறை வலைதளத்தில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதிக்கு பிறகும், நிகோபார் திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து தரவுகள் இல்லை. 

இதற்கு சமூகவலைதளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நிகோபார் தீவின் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து விளைவிக்கும் எனப் பதிவிட்டு வருகின்றனர். 

நிகோபார் வளர்ச்சித் திட்டத்தில் அழிக்கப்படும் மரங்களை ஈடு செய்யும் வகையில், 261.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை வழங்க ஹரியாணா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com