மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹரியாணா கலவரம்: 156 பேர் கைது, 56 வழக்குகள் பதிவு

நூ மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
கோப்புப் படம்.
Updated On :7 ஆகஸ்ட் 2023, 7:25 am

DIN

நூ மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் ஊா்வலத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவம், இரு பிரிவினருக்கு இடையே மதக் கலவரமாக மாறியது. இதைத் தொடா்ந்து, அருகிலுள்ள மாவட்டங்களில் கலவரம் பரவியது. இதில் 2 ஊா்க்காவல் படையினா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, நூ மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்படுள்ள கட்டங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 3 அடுக்கு மாடி சஹாரா உணவகம் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த நிலையில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கலவரம் காரணம் இதுவரை 6 பலியானதோடு 88 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.

இதனிடையே நூ மாவட்டத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் நடமாட்டத்திற்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. நூ மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது, திங்களன்று, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மாவட்டத்தில் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் இன்று பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும் என்றார்.

முன்னதாக நூ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.