
மிஸோரம் ரயில்வே பாலம் இடிந்த விபத்தின் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
மிஸோரம் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்ததில் 21 தொழிலாளர்கள் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும், இருவரின் நிலைமை தெரியவில்லை என்வும் மிஸோரம் அரசு இன்று(ஆக.24) தெரிவித்துள்ளது.
தலைநகா் ஐசாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சாய்ரங் பகுதியில் குருங் நதியின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் புதன்கிழமை காலை 10 மணியளவில் இடிந்து விழுந்ததது.
இந்த பால விபத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோா் மேற்கு வங்கத்தின் மால்டாவை சோ்ந்தவா்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவு!
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உயர்மட்டக் குழுவை அமைத்து, பலியானவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என மிஸோரன் அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.