சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (சரத் பவார் பிரிவு) சேர்ந்த தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. 

இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது, “மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் வேறுபட்டவை. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தது. அதனால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருத இயலாது.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com