
அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை.
முன்னதாக, கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி இதேபோல 4.2 ரிக்டர் அளவில் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.