மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு..

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களை செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2023, 10:19 am

DIN

சென்னை: வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களை செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அதிகாரப்பூர்வ லாக்-இன் ஐடிக்களை வைத்து, விண்ணப்பத்தில் அளித்த தகவல்களை திருத்த வேண்டுமெனில் திருத்திக் கொள்ளலாம். இந்த வாய்ப்பு டிசம்பர் 8ஆம் தேதி இரவு 11.50 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் மாணவர்கள் திருத்த முடியாது. தேர்வு மையம், தேர்வு தாள் உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு  என்ற இணையதள முகவரியில் சென்று மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியது இருந்தால் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 1ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) தேதிகளை தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி நிறைவுபெற்றிருக்கிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்காக ஜேஇஇ தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு ஜேஇஇ முதன்மைத் தோ்வின் முதல் கட்டத் தோ்வு ஜன. 24 முதல் பிப்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டத் தோ்வு தோ்வு ஏப்.1 முதல் ஏப்.15-ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினிவழியில் நடைபெறும் இத்தோ்வு முடிவுகள் தோ்வு முடிவுற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் வெளியிடப்படும். மேலும் தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகள் குறித்த விவரங்களை  இணையதளப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.