இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்: காங்கிரஸ்

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு அங்கு சட்டபேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2023, 12:44 pm

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு அங்கு சட்டபேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு நிறைய விஷயங்களை கவனத்தில்  எடுத்துக் கொண்டுள்ளது. சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் கவனமாகப் படிக்க வேண்டும். நாங்கள் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க மறுக்கிறோம். நாங்கள் ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீருக்கு முழுமாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்பட வேண்டும். லடாக் மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் வரவேற்கிறோம். ஆனால், அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.