முதல்வரை தேர்வு செய்யமுடியாத பாஜக: அசோக் கெலாட் தாக்கு!

ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி எட்டு நாட்கள் நிறைவடைந்த பின்பும் கூட பாஜகவால் முதல்வரை தேர்வு செய்ய முடியவில்லை என்று அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
முதல்வரை தேர்வு செய்யமுடியாத பாஜக: அசோக் கெலாட் தாக்கு!

ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி எட்டு நாட்கள் நிறைவடைந்த பின்பும் கூட பாஜகவால் முதல்வரை தேர்வு செய்ய முடியவில்லை என்று அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் 115 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன. பாஜக தற்போதுவரை முதல்வரை அறிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து விமர்சித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி எட்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும்கூட பாஜகவால் தனது முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. 

இதில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே மாநிலங்களவை உறுப்பினரின் வீட்டில் நடைபெறும் சோதனையை முன்வைத்து பாஜக போராட்டங்களை நடத்தி வருகிறது. அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

அதேபோல ராஜஸ்தான் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு பாஜக இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாஜகவின் தாமதத்தால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் புதிய முதல்வா் யாரென்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியாவை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசி வருகின்றனா். இந்த மாநிலத்தில் முதல்வா் தோ்வுக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்பட மூன்று பாா்வையாளா்களை கட்சி மேலிடம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com