ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா: மாநிலங்களவையில் தாக்கல்

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா மற்றும் ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா ஆகியவற்றை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதாவானது புலம்பெயா்ந்த சமூகத்திலிருந்து ஒருவரையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஒருவரையும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்க வகை செய்கிறது.

ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு திருத்த மசோதாவானது அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கு தகுதியுள்ள ஒரு பிரிவு மக்களின் சமூகப் பிரிவு பெயரிடலை மாற்ற வழிவகுக்கிறது.

இந்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிற்பகல் தாக்கல் செய்தார். தொடர்ந்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.

முன்னதாக கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com