ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பெரிய அலைகளுக்கு நடுவே மாயமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடித்துச் செல்லப்பட்ட மாணவரின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது அகில் எனும் மாணவர் பெரிய அலைகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டதாகவும் பின் மறைந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சபரிமலையில் எண்ம முறையில்காணிக்கை செலுத்தும் வசதி
தகவலறிந்து உடனே வந்த கடற்கரைக் காவல் படையினர் தேடுதல் பணியைத் துவங்கியுள்ளனர். மாணவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா? ஜோதிமணி கடும் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!

போதைப் பொருள் கடத்தல்! சௌதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



