மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டினார். 

News image

கூட்டத்தில் ராகுல் காந்தி, கார்கே, கே.சி.வேணுகோபால்

Updated On :26 டிசம்பர் 2023, 6:40 pm IST

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது, “வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் விரிவாக விவாதித்தோம்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆனால் கல்வான் தாக்குதலுக்குப் பிறகு நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பீர்பாஞ்சலில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் கொலைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து கிடைப்பதை விரைவில் காணலாம். 

லடாக் மக்கள், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், அப்பகுதியின் பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒருமித்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.