தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உலக வானொலி நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக வானொலி நாளையொட்டி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 9:42 am

DIN


உலக வானொலி நாளையொட்டி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

உலக வானொலி நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வானொலி நேயர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள். புதுமையான நிகழ்ச்சிகளின் வாயிலாகவும், மனித படைப்பாற்றலை வெளிப்படுத்தியும் ஏராளமானோரின் வாழ்வை வானொலி தொடர்ந்து ஒளிமயமாக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார். 

“உலக வானொலி நாளையொட்டி வரும் 26 ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியின் 98 ஆவது பதிப்பு பற்றி உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். MyGov, NaMo App   செயலியின் மூலம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் அல்லது 1800-11-7800 எண்ணைத் தொடர்பு கொண்டு உங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.” என்று மோடி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.