ட்விட்டரின் புதிய சிஇஓ: எலான் மஸ்க் கிண்டல்!

ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரி இவர்தான் என்று கேலியான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரி இவர்தான் என்று கேலியான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.

கருத்துகளை நவீனமயமாக்கம் என்ற முறையில் அவரது நடவடிக்கைகள் வெறுப்பு கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் அதிகரிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

ஏற்கெனவே டிரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது ட்விட்டர் கணக்கை திரும்ப கொண்டுவந்தார் எலான் மஸ்க். டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து, சுமார் 7,500 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பலர் தாங்களாகவே வெளியேறினர்.

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று பயனர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பின் முடிவில்  56% ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என தெரிவித்தனர்.

மஸ்க் தோல்வியை ஒப்புக்கொண்டு, தன்னுடைய பதவிக்கு தகுதியானவர் கிடைத்தவுடன் பதவியை விட்டு வெளியேறுகிறேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரில் தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, இவர்தான் புதிய சிஇஓ என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மஸ்க் பகிர்ந்துள்ள புகைப்படம்,  சிஇஓ நாற்காலியில் அவரது வளர்ப்பு நாய் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அந்த நாய்  கருப்பு டி-ஷர்ட் அணிந்துள்ளது. அதில் சிஇஓ என்று எழுதப்பட்டுள்ளது. நாயின் முன் ஓரிரு ஆவணங்களும், சிறிய மடிக்கணினியும் உள்ளது.
 

இந்த ட்வீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com