கோப்புப் படம்
கோப்புப் படம்

துருக்கி, சிரியாவுக்கு பெங்களூருவிலிருந்து நிவாரணப் பொருள்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெங்களூருவிலிருந்து தன்னார்வலர்கள் குழு தில்லியில் உள்ள துருக்கி தூதரகம் மூலம் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தனர்.

புதுதில்லி: துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெங்களூருவிலிருந்து தன்னார்வலர்கள் குழு புதுதில்லியில் உள்ள துருக்கி தூதரகம் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.

பிப்ரவரி 6ஆம் தேதியன்று 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தென்கிழக்கு துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரிய நில அதிர்வுகள் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமானது. இதில் 39,000க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பலர் நிலை கவலைகிடமாக உள்ளது.

துருக்கி தூதரகத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட போர்வைகளும், சிரியா தூதரகத்திற்கு பண நன்கொடையும் வழங்கினோம். அதே வேளையில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளில் பங்கேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், அவர்களின் துன்பத்தை எளிதாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வலர் புனீத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com