ஏப்ரல் 25ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்தாண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 6.20-க்கு நடை திறக்கப்படுகிறது. 
ஏப்ரல் 25ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்தாண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 6.20-க்கு நடை திறக்கப்படுகிறது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் குளிர்காலத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 25 அன்று கோயிலின் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோயிலின் சமிதி தெரிவித்துள்ளது. 

மகாசிவராத்திரியை முன்னிட்டு உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிகாரிகள், புரோகிதர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குளிர்காலத்தில் வழிபடப்படும் உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு கேதார்நாத் மூடப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமான் சிலை கீழே கொண்டு வரப்படுகிறது.

பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஏப்ரல் 27 மற்றும் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேதார்நாத் உள்ளிட்ட சார் தாம் கோயில்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கடும் குளிர் காரணமாக மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com