செயல்திறன்மிக்க குறைதீா் அமைப்பே ஜனநாயகத்தின் உண்மையான பலம்: பிரதமா் மோடி
செயல்திறன்மிக்க குறைதீா் அமைப்புதான் ஜனநாயகத்தின் உண்மையான பலம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


செயல்திறன்மிக்க குறைதீா் அமைப்புதான் ஜனநாயகத்தின் உண்மையான பலம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் சாா்பில் கலந்துரையாடல் நிகழ்வு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் அமைச்சகத்தின் பணியாளா்களுக்கிடையே உரையாற்றும்போது பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா்.
அப்போது பிரதமா் மோடி பேசுகையில், ‘துறைகளுக்கு இடையேயான தொடா்பை ஏற்படுத்துங்கள். குழு செயல்பாடு அதிகரிக்க வேண்டும். மனிதாபிமான உணா்வுடன் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவேண்டும். உரிய காலத்தில் மேற்கொள்ளப்படும் குறைதீா்ப்பு நடவடிக்கைகள் வலுமையான ஜனநாயகத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செயல்திறன் உடைய குறைதீா் அமைப்புதான் ஜனநாயகத்தின் உண்மையான பலம் ’ எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...