எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்த பிகார் அரசு!

பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 3 சதவிகிதம் அதிகரிக்க பிகார் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 பிப்ரவரி 2023, 6:47 am

பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 3 சதவிகிதம் அதிகரிக்க பிகார் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

பிகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் வால்மிகி புலிகள் காப்பகத்தில் உள்ள காண்டாமிருங்களின் எண்ணிக்கையை அடுத்த 2 ஆண்டுகளில் 5 சதவிகிதத்துக்கு உயர்த்த பிகார் மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெரிய ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை ஆண்டு ஒன்றுக்கு 3 சதவிதம் உயர்த்தும் முடிவு நேபாளத்தின் சித்வானில் பிப்ரவரி 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற 3-வது ஆசியா காண்டாமிருகங்கள் உள்ள நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பிகாரின் முதன்மை வனப்பாதுகாப்பு காவலர் பி.கே.குப்தா கூறியதாவது: காண்டாமிருங்கள் உள்ள நாடுகளான இந்தியா, பூடான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் நேபாளம் ஆசிய காண்டாமிருகங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், ஜாவா மற்றும் சுத்ரா காண்டாமிருங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையினை குறைந்தது ஆண்டுக்கு 3 சதவிகிதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிகாரிலும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிகாரின் வால்மிகி புலிகம் காப்பகம் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உகந்த இடமாக இருப்பதால் மாநில அரசு அந்த இடத்தினை தேர்வு செய்துள்ளது. காண்டாமிருகங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வால்மிகி புலிகள் காப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.