சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்: மணீஷ் சிசோடியா

தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்: மணீஷ் சிசோடியா

தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (பிப்ரவரி 19) தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதற்கு விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று மணீஷ் சிசோடியா ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில்,  தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிபிஐ-ன் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு வாரத்துக்கு பிறகு நான் தயாராக இருப்பேன். தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் சிபிஐ-க்கு கடிதத்தின் மூலம் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளேன். நான் பிப்ரவரி இறுதி வாரத்தில் ஆஜராவேன் எனவும் தெரிவித்துள்ளேன். தில்லி அரசின் நிதியமைச்சராக சரியான நேரத்தில் பட்ஜெட்டினைத் தாக்கல் செய்யும் கடமை எனக்கு உள்ளது. நான் அதற்காக 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்து வருகிறேன்.

சிபிஐ அதிகாரிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் அவகாசம் கேட்டுள்ளேன். பாஜக தில்லித் தேர்தலில் தோற்றுவிட்டது. அதனால், அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சிபிஐ அமைப்பினைப் பயன்படுத்தி பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் என்னை கைது செய்யும் வரை ஓயமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் எப்போதும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். இப்போதும் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக உள்ளேன். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் இருப்பதால் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com