/

மும்பை இரட்டை அடுக்குப் பேருந்து பற்றிய சுவாரஸ்யங்கள்

மும்பையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய நாட்டின் முதல் இரட்டை அடுக்கு குளிர்சாதன பேருந்து சேவை கடந்த ஆண்டு தொடக்கப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:34 am

DIN


மும்பையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய நாட்டின் முதல் இரட்டை அடுக்கு குளிர்சாதன பேருந்து சேவை கடந்த ஆண்டு தொடக்கப்பட்டது.

எனினும், இதன் அதிகாரப்பூர்வ வணிகரீதியிலான பயணிகள் சேவை இன்று காலை தொடங்கியிருக்கிறது. மும்பையின் சிஎஸ்எம்டி முதல் நாரிமன் முனை அல்லது என்சிபிஏ வரையில் இந்த பேருந்து ஏ-115 வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துகள் வார இறுதி நாள்களில் பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பாரம்பரிய கட்டடங்களைக் கொண்ட பகுதிகள் வழியாக இயக்கப்படும்.

5 கிலோ மீட்டருக்கு ரூ.6 என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பாரம்பரிய சுற்றுலா பயணத்தின்போது இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்தின் கீழ்தளத்தில் பயணிக்க ரூ.75ம், மேல்தளத்தில் பயணிக்க ரூ.150ம் கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இது முற்றிலும் எண்ம ரீதியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது பேருந்துக்குள் ஏறி டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

சலோ செயலி மூலமாக அல்லது சலோ ஸ்மார்ட்கார்டு மூலமாகவும் மக்கள் இந்த பேருந்தில் பயணிக்க டிக்கெட் எடுக்கலாம்.

இந்தப் பேருந்தின் மேல் தளத்துக்குச் செல்ல வழக்கம் போல ஒரு படிகட்டு மட்டுமல்லாமல் இரண்டு பக்கமும் படிகட்டுகள் உள்ளன.

இன்னும் ஒரு சில வாரங்களில் சிஎஸ்எம்டி முதல் இந்திய நுழைவுவாயில் மற்றும் குர்லா முதல் பிகேசி மற்றும் கிழக்கு பாந்த்ரா வரை கூடுதலாக இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.