தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பெங்களூருவில் கட்டுமான தளத்திலிருந்து விழுந்து 6 வயது சிறுமி பலி!

பெங்களூருவில் கே.ஆர்.நகரில் கட்டுமான தளத்திலிருந்து விழுந்து 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

News image
Updated On :25 பிப்ரவரி 2023, 9:48 am

பெங்களூருவில் கே.ஆர்.நகரில் கட்டுமான தளத்திலிருந்து விழுந்து 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

உயிரிழந்த குழந்தை மகேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது பெற்றோர் சுல்தான்பேட்டையில் உள்ள கட்டுமான தளத்தில் கூலி வேலை செய்து வந்தனர். அவர்கள் கட்டப்பட்டு வரும் கட்டட வளாகத்தில் வசித்து வந்தனர். 

வெள்ளிக்கிழமை இரவு லிப்ட் நிறுவுவதற்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளதை அறியாத பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடினர். காலையில் குழியில் தண்ணீர் நிரப்பப்பட்டபோது சடலம் வெளியேவந்தது தெரியவந்தது. 

அந்த கட்டடம் விக்ரம் என்பவருக்குச் சொந்தமானது. கட்டுமானப் பணியில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த வழக்கின் விசாரணையை கே.ஆர். மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.