
புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் பேரவையில் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மைய இயக்குநரகம் நடத்திய ஆய்வில், ஒடிசாவின் தியோகார், கியோஞ்ஜஹார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மூன்று தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கியோஞ்சஜார் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும், தியோகார் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பூமிக்கடியில் தங்கம் புதைந்துகிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
எனவே, ஒடிசா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.