எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒடிசா: ரஷிய நாட்டு பொறியாளரின் உடல் கூறாய்வுக்கு அனுப்பிவைப்பு

ஒடிசாவில் பாராதீப் துறைமுகப் பகுதியில் இருந்த சரக்குக் கப்பல் ஒன்றில், ரஷியாவைச் சேர்ந்த பொறியாளர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

News image
ஒடிசா: ரஷியா நாட்டு பொறியாளரின் உடல் கூறாய்வுக்கு அனுப்பிவைப்பு
Updated On :4 ஜனவரி 2023, 10:53 am

DIN

புவனேஸ்வரம்: ஒடிசாவில் பாராதீப் துறைமுகப் பகுதியில் இருந்த சரக்குக் கப்பல் ஒன்றில், ரஷியாவைச் சேர்ந்த பொறியாளர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பாராதீப் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, காவல்துறையினர் உதவியோடு கப்பலில் இருந்து இறக்கப்பட்ட ரஷிய நாட்டவரின் உடல், நீதிபதிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் முன்னிலையில் உடல்கூறாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ரஷியாவில் உள்ள மாகாண பேரவையின் உறுப்பினா் பாவெல் ஆன்டோவ், அவரது நண்பா் விளாதிமீா் பைடனோவ் ஆகிய இருவரும் ஒடிஸா சுற்றுப்பயணத்தின்போது உயிரிழந்த நிலையில், ரஷியாவைச் சோ்ந்த மற்றொரு நபர் ஓடிக் கொண்டிருந்த சரக்குக் கப்பலில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செவ்வாயன்று சரக்குக் கப்பலில் உயிரிழந்த பொறியாளர் 51 வயதாகும் செர்கே மில்யாகோவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகிறார்கள்.

சரக்குக் கப்பலின் ஊழியர் இவர் என்றும், உடல் கூறாய்வுக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும், கப்பலில் திடிரென சரிந்து விழுந்து செர்கே மரணமடைந்ததாக உடன் இருந்தவர்கள் குறிப்பிட்டதாகவும், அதனால் அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒடிஸாவில் உள்ள விடுதி ஒன்றில் ரஷியாவில் உள்ள மாகாணம் ஒன்றின் பேரவை உறுப்பினா் உள்பட இருவா் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்தனர்.

விளாதிமீா் மாகாண பேரவை உறுப்பினரும் தொழிலதிபருமான பாவெல் ஆன்டோவ், தனது 66-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது நண்பா்கள் 3 பேருடன் சுற்றுலா விசா மூலம் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்துக்கு வந்தாா்.

இந்நிலையில், அவருடன் வந்திருந்த விளாதிமீா் பைடனோவ் என்பவா் கடந்த டிச.22-ஆம் தேதி தங்கியிருந்த விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா்.

ராயகடாவில் டிச.24-ஆம் தேதி நடைபெற்ற பைடனோவின் இறுதிச்சடங்கில் போலீஸாருடன் ஆன்டோவ் கலந்துகொண்டாா். மாலையில் விடுதிக்கு திரும்பிய ஆன்டோவ் விடுதியின் 3-ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக ஆன்டோவ் 3-வது தளத்துக்கு செல்வதை விடுதி பணியாளா் ஒருவா் பாா்த்துள்ளாா். சிசிடிவி காட்சிகளும் இதை உறுதிப்படுத்தின.

ரஷிய நாட்டினா் இருவரது அடுத்தடுத்த மரணம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து ராயகடா காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், இந்த விசாரணையை சிஐடியின் குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றி டிஜிபி சுனில் குமாா் பன்சால் உத்தரவிட்டிருந்தார். தற்போது ரஷியாவைச் சேர்ந்த மூன்றாம் நபர், ஒடிசாவில் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை உறுப்பினரான ஆன்டோவ், உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எதிராக அந்நாட்டின் அதிபா் விளாதிமீா் புதினை விமா்சித்தவா். எனவே, இவரது மரணம் சா்வதேச அளவில் கவனத்தை ஈா்த்திருந்தது. இந்த நிலையில், ரஷியாவைச் சேர்ந்த மூன்றாம் நபர் சரக்குக்கப்பலில் மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.