உலகம் முழுவதிலும் கரோனா என்ன செய்து கொண்டிருக்கிறது? ஸ்பாட் நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.1 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 உலகம் முழுவதிலும் கரோனா என்ன செய்து கொண்டிருக்கிறது? ஸ்பாட் நிலவரம்
 உலகம் முழுவதிலும் கரோனா என்ன செய்து கொண்டிருக்கிறது? ஸ்பாட் நிலவரம்


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.1 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த 24 மணிநேரத்தில் 1.9 லட்சம் பரிசோதனை நடத்தப்பட்டதில், 228  (0.1%) பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை (173), செவ்வாய் (734), புதன் (175), வியாழன் (188) பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று புதிதாக 214 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் அதாவது 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சீன அரசின் கரோனா கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் கடுமையாக விமரிசித்த சுமார் 1000க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 6ஆம் தேதி சீனத்தில் கரோனா பாதித்த மூன்று பேர் பலியானதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்பட்டு வருகிறது.

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்ய நெதர்லாந்து முடிவு செய்திருக்கிறது.

டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். சுமார் 10 ஆயிரம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com