
தேசிய கல்விக் கொள்கை குறித்த அனைவரின் பார்வையையும் திறந்த மனதுடன் மத்திய அரசு வரவேற்பதாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை ஆவணம் குறைந்த பக்கங்களை கொண்டதாக இருப்பினும் அதில் பலரும் பயனடையும் வகையில் பல புதிய அம்சங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது: சஞ்சய் ரௌத்
பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கல்வி மத்திய-மாநில அரசுகள் சட்டமியற்றக் கூடிய பொதுப் பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசு, தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் தாய் மொழியைக் கற்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் எழுதவும், படிக்கவும் உதவியாக இருக்கும். மேலும், இந்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம் புத்தகங்களை வெளியிட உள்ளது. இதன்மூலம் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் சிறப்பாக படிக்க முடியும். இந்தியாவின் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் வழங்குதல் மற்றும் அறிவுக் கூர்மை (ஞானம்) பெறுவது தொடர்பானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.