பாதுகாப்பு குறைபாடு: ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி; காவல் துறை விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காவல் துறை துரதிருஷ்டவசமாக முழுவதும் செயலிழந்துவிட்டதால் இன்று ஒரு நாள் ஒற்றுமை நடைப்பயணம் நிறுத்தப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 
பாதுகாப்பு குறைபாடு: ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி; காவல் துறை விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காவல் துறை துரதிருஷ்டவசமாக முழுவதும் செயலிழந்துவிட்டதால் இன்று ஒரு நாள் ஒற்றுமை நடைப்பயணம் நிறுத்தப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று (ஜனவரி 27) ஜம்மு-காஷ்மீரின் பனிஹால் பகுதியில் இருந்து ராகுலின் நடைப்பயணம் தொடங்கியது. குண்டுகள் துளைக்காத வாகனத்தில் வந்த ராகுல் காந்தி காசிகுந்த் பகுதியிலிருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

அவர் வெறும் 500 மீட்டர் மட்டுமே நடந்திருப்பார். அதன் பின், அவரை வரவேற்க காத்திருந்த அதிக அளவிலான மக்கள் திரண்டிருந்தனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ராகுலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல் துறை அதிகாரிகள் இல்லாததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் இன்று நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், காவல் துறையைச் சேர்ந்தவர்களை எங்கும் காண முடியவில்லை. இன்று (ஜனவரி 27) 11 கிலோமீட்டர் நடப்பதாக இருந்தது. ஆனால், அது தற்போது தடைப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்வது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் பொறுப்பு. ஆனால், அவர்கள் அதனை சரிவர செய்யவில்லை.

மீதமுள்ள நாட்களில் நடைப்பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இன்று பாதுகாப்பு குறைபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. நாளை மற்றும் நாளை மறுநாள் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படக் கூடாது. எனது பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்டு இந்த நடைப்பயணம் இன்று (ஜனவரி 27) ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு அறிவுரைகளை மீறி நான் செயல்பட முடியாது என்றார்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சார்பில் காவல் துறை பாதுகாப்பில் எந்த ஒரு பாதுகாப்பு குறைபாடும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com