மோா்பி தொங்கு பாலம் விபத்து: குற்றப்பத்திரிகை தாக்கல்

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

குஜராத் மாநிலம் மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

1,200-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகை, மோர்பி அமர்வு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், குற்றப்பத்திரிகையில் 10வது குற்றவாளியாக ஓரேவா குழுமத்தின் ஜெய்சுக் படேல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அக்டோபர் மாதம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் பலியாகினர்.

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்ந்தது.

கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த அக். 26-ஆம் தேதி குஜராத்தின் புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் 135 போ் உயிரிழந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com