தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாப்-10 பணக்காரர்கள் பட்டியலில் இல்லை: அம்பானிக்கு அடுத்த இடத்தில் அதானி!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி கெளதம் அதானி 11வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

News image

கௌதம் அதானி

Updated On :31 ஜனவரி 2023, 7:47 am

DIN

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி கெளதம் அதானி 11வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதன்மூலம், முகேஷ் அம்பானி 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைவதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் கௌதம் அதானியின் இடம் தொடர் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், திங்கள்கிழமை வணிகத்தின் போது,  அதானியின் சொத்து மதிப்பு மேலும் 8.5 பில்லியன் டாலர்கள் சரிந்து 88.2 பில்லியன் டாலர்களாக குறைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 8ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் பங்குகள் இறங்குமுகத்திலேயே வணிகமாகின்றன. இதிலும் மூன்று நிறுவனங்களின் பங்குகள் இன்று முற்பகல் 12 மணியளவில், இதுவரைக் காணாத விலை சரிவைக் கண்டன.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் நேற்று எட்டாவது இடம் வகித்த அதானி, இன்று பிற்பகல் நிலவரப்படி 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானிக்கும் அதானிக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 4 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் முகேஷ் அம்பானி 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story image

கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாவது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு தொடர் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.