புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பிரதமர் மோடியை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :21 ஜூலை 2023, 6:07 am

DIN

புது தில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான மிக நீண்ட நெடிய நட்புறவை புதுப்பிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு பயன்பெறும் வகையிலும் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் கோத்தய ராஜபட்ச தலைமையிலான அரசு அகற்றப்பட்டது. அதன் பிறகு ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்தது. அதிபரான பிறகு ரணில் இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம், எரிசக்தி, வேளாண்மை, கடல்சாா் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களை இலங்கையில் இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்தப் பயணத்தின்போது இத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியத் தரப்புடன் ரணில் பேச்சு நடத்துகிறார்.

இலங்கை மீன்வளத் துறை அமைச்சா், மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா், வெளியுறவு அமைச்சா் மற்றும் அதிகாரிகள் பலரும் அதிபருடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.