அஜீத் பவார் முதல்வராக முடியாது: தேவேந்திர ஃபட்னவீஸ்

அஜீத் பவார் முதல்வராக முடியாது என்றும் அதுபற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியிருக்கிறார்.
அஜீத் பவார் முதல்வராக முடியாது: தேவேந்திர ஃபட்னவீஸ்


மும்பை: மகாராஷ்டிர முதல்வராக அஜீத் பவார் நியமிக்கப்படவிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவர் முதல்வராக முடியாது என்றும் அதுபற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவான் கூறுகையில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வராக அஜீத் பவார் பொறுப்பேற்கவிருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், அதனை துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மறுத்துள்ளார்.

அஜீத் பவார், முதல்வராக முடியாது. அது மட்டுமல்லாமல் அது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். ஜூலை 2ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது இது தொடர்பாக அவரிடம் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே அவர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் என்றும் ஃபட்னவீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். இதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவராக, நான் இங்கு உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அஜீத் பவார் ஒருபோதும் மகாராஷ்டிர முதல்வராக மாட்டார் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அஜீத் பவாா் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 35 போ் ஆளும் கூட்டணியில் இணைந்தனா். இதில் அஜீத் பவாருக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. அவருடன் வந்த எம்எல்ஏக்களில் 8 போ் அமைச்சராகப் பதவியேற்றனா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம், தலைமைக்கு அங்கீகாரம் கோரி அஜீத் பவாா் தரப்பும், தங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என சரத் பவாா் தரப்பும் தோ்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com