நாட்டில் காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி இதுகுறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
2018 ஜனவரி 1 முதல் 2023 ஜூன் 30 வரை 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 62,237 பேர் ஆண் குழந்தைகள், 2,12,825 பேர் பெண் குழந்தைகள்.
நாட்டில் காணாமல் போன 2,75,125 குழந்தைகளில் 2,40,502 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,73,786 பெண், 66,638 ஆண் குழந்தைகள்.
இதையும் படிக்க | ஜூலை 29ல் மணிப்பூர் செல்கிறது இந்தியா கூட்டணி!

அதிகமான குழந்தைகள் காணாமல் போன பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 49,024 பெண் குழந்தைகள் உள்பட 61,102 குழந்தைகளைக் காணவில்லை.
மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் 41,808 பெண் குழந்தைகள் உள்பட 49,129 பேரும்,
கர்நாடகத்தில் 18,893 பெண் குழந்தைகள் உள்பட 27,528 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
அதைத் தொடர்ந்து குஜராத்தில் காணாமல் போனது 20,081 குழந்தைகள். அவர்களில் 16,432 பேர் பெண் குழந்தைகள்.
தில்லியில் காணாமல் போன 22,964 குழந்தைகளில் 14,840 பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்தீவு, மிசோரம் மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போனது குறித்த வழக்குகள் ஏதும் இல்லை. அதுபோல வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் ஒரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


