/

ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். 

News image
Updated On :13 ஜூன் 2023, 10:56 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். 

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதிக்கு அருகே பாதுகாப்புப்படையினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.