நெருங்கும் பிபர்ஜாய் புயல்: சிந்து மாகாணத்தில் 62 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

அதி தீவிர புயலான பிபர்ஜாய் புயல் இன்று காரையைக் கடக்கவுள்ள நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 62 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
நெருங்கும் பிபர்ஜாய் புயல்: சிந்து மாகாணத்தில் 62 ஆயிரம் பேர் வெளியேற்றம்!


அதி தீவிர புயலான பிபர்ஜாய் புயல் இன்று காரையைக் கடக்கவுள்ள நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 62 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணிக்கு கரையைக் கடக்க உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியை இந்த புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

சிந்து மாகாணத்தின் தகவல் அமைச்சர் சார்ஜில் மேனன் கூறுகையில், 

கேதி பாந்தர் துறைமுகம், சிந்து, தட்டா மற்றும் கட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பெய்து வருகின்றன. எனவே, சிந்து உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இவர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான முகாம்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

பிபர்ஜாய் புயல் இன்று கடக்க உள்ள நிலையில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் மிக பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 1405 முதல் 150 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் கரையைக் கடக்கும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும்,  மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் ராணுவம், இந்தியக் கடலோர காவல்படை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com