ஒடிசா: சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன

ஒடிசாவில் சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிசாவில் சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டதில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும் கூறினார். மேலும் சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாலாசோர் மாவட்டத்தின் பஹங்கா பஜாரில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com