சிக்கிம்: நிலச்சரிவில் சிக்கிய மேலும் 300 சுற்றுலா பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்

வடக்கு சிக்கிமில் பெய்த தொடா்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினா் மீட்டனா். 
சிக்கிம்: நிலச்சரிவில் சிக்கிய மேலும் 300 சுற்றுலா பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்

வடக்கு சிக்கிமில் பெய்த தொடா்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினா் மீட்டனா். 

வடக்கு சிக்கிமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுங்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சுற்றுலா சென்ற 300 சுற்றுலா பயணிகள் சிக்கினர். உடனே தகவல் கிடைத்ததும் அவர்கள் அனைவரையும் இந்திய ராணுவத்தினா் பத்திரமாக மீட்டனா். 

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், 300 சுற்றுலா பயணிகளை வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங்கில் இந்திய ராணுவத்தின் ‘திரிசக்தி’ பிரிவு வீரா்கள் மீட்டனர், மேலும் அவர்கள் காங்டாக் நோக்கி நகர்வதற்கு தற்காலிக பாலத்தை கடக்க உதவினார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் இந்திய ராணுவ வீரர்களால் வழங்கப்பட்டன. 

ஒரு சுற்றுலா பயணி மயக்கமடைந்தார், உடனடியாக அவர் ஸ்ட்ரெச்சர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிக்கிமின் அதே மலைப் பகுதிகளில் சனிக்கிழமை 2,000 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினா் மீட்டனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com