விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை நீக்கி இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2023, 6:15 am

DIN

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதை தங்களது கனவாக கொண்டிருந்தனர். ஆனால், இன்று அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. கடந்த 2014 ஆம் ஆண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்துள்ளது.

வளர்ச்சியை நோக்கியை செல்லும் நாட்டில் இது போன்று வேலைவாய்ப்புகள் குறையுமா? 1,81,127 பேர் பிஎஸ்என்எல்-ல் இருந்து வேலையை இழந்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஆனால், வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை நீக்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.