இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மணிப்பூர் கலவரம்: பிரதமருக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம்!

மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர். 

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2023, 3:52 pm

DIN


மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர். 

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படாததைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தின் 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதினர். 

பாஜகவின் பிரித்தாளும் அரசியலே மணிப்பூரின் இந்த நிலைக்கு காரணம் என எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.