
ஹிமாசலில் வழக்கமாக தொடங்குவதைக் காட்டிலும் முன்னதாகவே இன்று (ஜூன் 24) தென்மேற்கு பருவழை தொடங்கி மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
ஹிமாசலில் பெய்து வரும் கனமழையால் சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 300 ஆடுகள் பலியாகின. மேலும், ஒரு வீடு மற்றும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஹிமாசலில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 28-29 தேதிகளில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 27 மற்றும் 28 ஆகிய நாள்களில் இடி மற்றும் மின்னலுக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணத்தால் ஹிமாசலின் தேசிய நெடுஞ்சாலை 5 உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 290 ஆடுகள் பலியாகின. 50-க்கும் அதிகமான ஆடுகள் காயமடைந்துள்ளன. நிலச்சரிவினால் குடிநீருடன் அசுத்த நீர் கலந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் நீரினை நன்றாக காய்ச்சிப் பருக அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.