ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

News image

ராகுல் காந்தி (கோப்புப் படம்)

Updated On :29 ஜூன் 2023, 2:34 am

DIN

தில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரஸின் விமா்சனமாகும்.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக தில்லியில் இருந்து இன்று காலை மணிப்பூருக்கு புறப்பட்டு ராகுல் காந்தி சென்றார்.

அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோரை சந்திக்கும் ராகுல், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.